உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 3 மாணவர்கள் தேர்ச்சி

என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 3 மாணவர்கள் தேர்ச்சி

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்று பேர், என்.எம்.எம்.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இதில், நடப்பு கல்வி ஆண்டுக்கான என்.எம்.எம்.எஸ் (தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான) தேர்வில், 16 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 3 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். இதன் வாயிலாக, மாணவர்களுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை கிடைக்கும். மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி