உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவ முகாமில் 300 பேர் பங்கேற்பு

மருத்துவ முகாமில் 300 பேர் பங்கேற்பு

வால்பாறை; வால்பாறை நடந்த இலவச மருத்துவ முகாமில், 300 பேர் பங்கேற்றனர். வால்பாறையில், கோழிப்பாறை அஹல்யா டயாபடீஸ் மருத்துவமனை, அஹல்யா கண் மருத்துவமனை மற்றும் கோவை தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. வால்பாறை தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மருத்துவ முகாமை மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் விஜயகுமார், ஏ.டி.பி., தொழிற்சங்க மாநிலத்தலைவர் அமீது, அ.தி.மு.க., நகர கழக செயலாளர் மயில்கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில், நீரழிவுநோய், நெஞ்சுவலி, மார்பு இறுக்கம், தலைவலி, தலைசுற்றல், குடல் இறக்கம், மூலநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். மருத்துவ முகாமில் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த, 300 பேர் கலந்து கொண்டனர். வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., கஸ்துாரி, ஆனைமலை ஒன்றிய செயலாளர் கார்த்திக், கோவை தெற்கு மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் நரசப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை