உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / "பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு புதுப்பிக்க வேண்டும்

"பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு புதுப்பிக்க வேண்டும்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டை புதுப்பிக்க நிதிஒதுக்குமாறு நெடுஞ்சாலைத்துறை சார்பில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு மிகவும் மோசமானதாக உள்ளது. இந்த ரோட்டில் வண்டிகள் ஓட்ட முடியாத நிலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரோடு பராமரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், இந்த ரோடு பராமரிக்கும் பணிகள் தற்காலிகமாக இருக்கும் பிரச்னைகளை மட்டுமே தீர்க்கும். இதையடுத்து, ரோட்டின் தரத்தை மேலும் உயர்த்த, திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோட்டை புதுப்பிக்க அதிக தொகை செலவாகும் என்பதால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த பணிகள் செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால், மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. கேரள எல்லை என்பதால், இந்த சாலை அமைக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நிதி ஓதுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை