மேலும் செய்திகள்
சிறுவாணி அடிவாரத்தில் 4 மி.மீ., மழை பதிவு
23-Jun-2025
கோவை; மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், தென்மேற்கு பருவ மழை மீணடும் பெய்யத் துவங்கியுள்ளது. சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 35 மி.மீ., அடிவாரத்தில், 15 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.அணை நீர் மட்டம், 42.12 அடியாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, 44.61 அடிக்கே நீர் தேக்க, கேரள நீர்ப்பாசனத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்காக, 10.24 கோடி லிட்டர் குடிநீர் நேற்று தருவிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டது.
23-Jun-2025