குமரகுரு கல்லுாரியில் 37வது பட்டமளிப்பு விழா
கோவை: கோவை சரவணம்பட்டியில் உள்ள, குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின், 37வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் தலைமை வகித்தார். தாளாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். கல்லூரியின் எலெக்ட்ரிக்கல் கிளஸ்டர் பிரிவின் டீன் ரமேஷ் பாபு அனைவரையும் வரவேற்றார். முதல்வர் அனில்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.தலைமை விருந்தினர் ஜாஷ் பவுல்ஜெர் பேசுகையில், “பட்டதாரிகள் தங்கள் வாழ்க்கையில், சமகால தொழில்நுட்ப அறிவை கொண்டவர்களாக இருக்க வேண்டும். நல்லதை செய்ய அச்சம் வேண்டாம். சவால்கள் வரும்போது, மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் பிறருக்கு உதவ வேண்டும்,” என்றார்.மாலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், 1300 மாணவ மாணவியர் பட்டம் பெற்றனர். சிறப்பு விருந்தினர் சன்மார் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் நாராயணன் சேதுராமன், பட்டங்களை வழங்கினார்.