உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராவல் மண் லோடு ஏற்றிய 4 டிப்பர் லாரிகள் பறிமுதல்

கிராவல் மண் லோடு ஏற்றிய 4 டிப்பர் லாரிகள் பறிமுதல்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு - சொக்கனூர் ரோட்டில், சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்து செல்வது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அவ்வழியில் வெளிமாநில பதிவு எண் கொண்ட, நான்கு டிப்பர் லாரிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியில் கிராவல் மண் ஏற்றி வந்தது உறுதியானது. இதையடுத்து, நான்கு டிப்பர் லாரியின் டிரைவர்களும் தப்பி ஓடிவிட்டனர்.ஒவ்வொரு லாரியிலும் தலா மூன்று யூனிட் என, மொத்தம் 12 யூனிட் கிராவல் மண் இருந்தது. சிறை பிடித்த லாரிகள் கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை