மேலும் செய்திகள்
அக்ரஹார சாமக்குளத்தில் நீர்வழிப் பாதை சீரமைப்பு
13-Sep-2024
அன்னுார் : ஆவாரங்குளத்தில், துாய்மை பணியில், 40 மூட்டை மது பாட்டில்கள் அகற்றப்பட்டன.கரியாம்பாளையம் ஊராட்சி, எல்லப்பாளையம் பிரிவில், 95 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரங்குளம் உள்ளது. இந்த குளத்தில் கவுசிகா நீர் கரங்கள் மற்றும் ஆவாரங்குளம் பாதுகாப்பு அமைப்பு சார்பில், ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று தூய்மை பணி நடக்கிறது. நேற்று மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் துாய்மை பணி செய்யப்பட்டது. மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் என 40 மூட்டை பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டன.இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், 'இந்த குளத்திற்கு மழை நீர் வரும் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேற்கு கரை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக குளத்தில் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்படுகிறது. சில இடங்களில் மது அருந்துகின்றனர். இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை பலகை வைக்கப்பட உள்ளது,' என்றனர்.
13-Sep-2024