மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் 41 பேர் சாட்சியம்
கோவை: பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்த நவ., 2ம் தேதி இரவில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரித்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட சதீஷ்,30, கார்த்திக்,21, குணா,20, ஆகியோரை போலீசார் காலில் சுட்டு பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது,கோவை மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடந்து வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், 13 பேர் சாட்சியம் அளித்தனர். நேற்று வரை, 41 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.