உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக அயோடின் குறைபாடு தினம் கோவையில் 42 மாதிரிகள் சேகரிப்பு

உலக அயோடின் குறைபாடு தினம் கோவையில் 42 மாதிரிகள் சேகரிப்பு

கோவை: உலக அயோடின் குறைபாடு தினத்தை முன்னிட்டு, கோவையில், 42 உப்பு மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அயோடின் உடலுக்கு தேவையான தாதுச்சத்து, தைராய்டு ஹார்மோன்களின் செயல்பாட்டுக்கு அவசியமானது. மனித உடல் மற்றும் மூளையின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும், அயோடின் சத்து கட்டாயம் தேவை. இவை குறைவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, இந்தியாவில் அயோடின்இல்லாத உப்பு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. உப்பில் அயோடின் கலப்பை உறுதிசெய்வதற்காக, ஆண்டுதோறும் வீடுகள், கடைகள், உணவகங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''ஒரு கிலோ உப்பில், 15 மில்லிகிராம் அயோடின் இருக்க வேண்டும்.அக்., 21ம் தேதி உலக அயோடின் குறைபாடு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி,கோவையில் மொத்த வியாபாரிகள், சில்லரை கடைகளில் இருந்து, 42 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன, '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை