உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹிந்தி தேர்வு; 4,370 பேர் பங்கேற்பு

ஹிந்தி தேர்வு; 4,370 பேர் பங்கேற்பு

கோவை; கோவையில் ஹிந்தி பிரசார சபா சார்பில் நடந்த ஹிந்தி தேர்வுகளில் 4,370 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். தக் ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை ஹிந்தி தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றுகள் வழங்கப்படுகின்றன. நேற்று தமிழகம் முழுதும் பிராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா தேர்வுகள் நடந்தன. இதுதொடர்பாக, தக் ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபா தமிழக செயலாளர் (பொ) அரவிந்த நாயகி கூறுகையில், “மூன்று படிநிலைத் தேர்வுகளிலும் சேர்த்து மொத்தம் 55 ஆயிரத்து 400 பேர் தேர்வெழுதினர். கோவையில் 10 தேர்வு மையங்களில் மொத்தம், 4370 பேர் தேர்வெழுதினர்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை