உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச செஸ் போட்டி; 482 வீரர்கள் பங்கேற்பு

சர்வதேச செஸ் போட்டி; 482 வீரர்கள் பங்கேற்பு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அக் ஷயா பொறியியல் கல்லுாரியில், சர்வதேச அளவிலான செஸ் விளையாட்டு போட்டி நடந்தது. இப்போட்டியினை அக் ஷயா பொறியியல் கல்லூரி மற்றும் மிராக்கிள் சதுரங்க பயிற்சி பள்ளி இணைந்து நடத்தியது. போட்டியை, ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சவுந்தர பாண்டியன் துவக்கி வைத்தார். கல்லூரி தலைவர் சுப்ரமணியன், அறங்காவலர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, 482 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியானது மாநில மற்றும் மாவட்ட சதுரங்க அமைப்புகள் மேற்பார்வையில் நடந்தது. போட்டி பல பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டு, முகமது இசான் என்பவருக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் மற்றும் லேப்-டாப் வழங்கப்பட்டது. பாலமுருகன் செந்தில்குமாருக்கு இரண்டாம் பரிசாக, 35 ஆயிரம் ரூபாயும், ஞானேஸ்வருக்கு மூன்றாம் பரிசாக 25 ரூபாய் வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடியவர்களுக்கு சைக்கிள், கோப்பைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ