உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதியோகி திவ்ய தரிசன காட்சி பராமரிப்புக்காக 5 நாட்கள் ரத்து

ஆதியோகி திவ்ய தரிசன காட்சி பராமரிப்புக்காக 5 நாட்கள் ரத்து

தொண்டாமுத்தூர் : கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.கோவை ஈஷா யோகா மையத்திற்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, இரவு, 7:20 மணிக்கு தொடங்கும் ஆதியோகி திவ்ய தரிசனத்தை, கண்டு ரசிப்பதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.15 நிமிடங்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், ஆதியோகி சிவன் சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாறு, சத்குருவின் கம்பீரக்குரலில் ஒலி, ஒளி காட்சியாக விவரிக்கப்படும்.பராமரிப்பு பணிகளுக்காக, இந்நிகழ்வு, நேற்று முதல் வரும் 28ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் 29ம் தேதி முதல் வழக்கம்போல், மக்கள் இந்நிகழ்வை கண்டு ரசிக்கலாம்.தியானலிங்கம், லிங்கபைரவி வளாகங்கள் எவ்வித மாற்றமுமின்றி வழக்கம் போல், பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து இருக்கும் என, ஈஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை