உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது

தொண்டாமுத்துார்; பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ., வினோத் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேரூர் செட்டிபாளையம், சிறுவாணி மெயின் ரோட்டை ஒட்டியுள்ள, ஊராட்சி குப்பை கிடங்கு அருகே நின்று கொண்டிருந்த ஒரு கும்பல், போலீசாரை கண்டு தப்பி ஓட முயற்சித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களை துரத்தி பிடித்து, சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. விசாரித்தபோது, தாங்கள் உபயோகிக்க வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, பேரூர் போலீசார், பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த ராகுல், 25, சக்திவேல், 26, பச்சாபாளையத்தைச் சேர்ந்த சஞ்சீவ், 19, மனோஜ் குமார், 24, சஞ்சய், 19 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 510 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ