மேலும் செய்திகள்
பஸ் நிலையங்களில் மஞ்சப்பை வழங்கல்
19-Jan-2026
அன்னூர்: குன்னத்தூர் ஊராட்சியில், கிருத்திகா மண்டபத்தில், பொதுமக்களுக்கு மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகள் விநியோகிக்கும் விழா நடந்தது. சிவசக்தி சமூக சேவை அமைப்பு சார்பில் மஞ்சப்பைகள் மற்றும் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. அமைப்பின் நிறுவனர் கீதா தங்கராஜ் விநியோகத்தை துவக்கி வைத்தார். இசைக் கலைஞர் வினேஷ் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மஞ்சள் பையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். எவர்சில்வர் பாத்திரம், கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றை பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டும். பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது. புலவர் வேல்முருகன், அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
19-Jan-2026