மேலும் செய்திகள்
இன்று இனிதாக... திருப்பூர்
11-Apr-2025
போத்தனூர்; கோவை, போத்தனூர் அடுத்து கணேசபுரத்திலுள்ள மூரண்டம்மன் கோவிலில், 50ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த, 10ல் வாஸ்து பூஜையுடன் துவங்கியது. 11ல் விநாயகர் வழிபாடு, கொடி கட்டுதல், காப்பு கட்டுதலும் இரவு முத்துமாரியம்மன் கோவிலிலிருந்து அம்மன் மற்றும் முக கரகம் அழைத்து வருதலும் நடந்தன. 12ல் சக்தி கரகம், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை அழைத்து வரப்பட்டன. நேற்று முன்தினம், மூரண்டம்மனுக்கு முதல் கால, சிவசக்தி யாக வேள்வி நடந்தது. சித்திரை மாத முதல் நாளான நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் இரண்டாம் கால சிவசக்தி யாக வேள்வி, 23 வகை மூலிகை அபிஷேகம், கஜ பூஜை, கோ பூஜை, பரி பூஜை, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு அன்னதானமும், மாலை அம்மன் திருவீதி உலாவும், இரவு மஞ்சள் நீர் பூஜையும் நடந்தன. திரளானோர் அம்மனை தரிசித்து சென்றனர். இன்று காலை, 10:00 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
11-Apr-2025