உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 535 போதை மாத்திரை பறிமுதல்; நான்கு பேர் கைது

535 போதை மாத்திரை பறிமுதல்; நான்கு பேர் கைது

கோவை; பீளமேடு பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 535 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.மாநகர பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், மதுவிலக்கு அமாலக்க பிரிவு போலீசார் சின்னியம்பாளையம், பொன் மாரியம்மன் கோவில் அருகில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு நான்கு வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் போலீசார் பார்த்ததும் ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடம் 535 மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, போதை மாத்திரை வைத்திருந்த காளப்பட்டியை சேர்ந்த யஷ்வந்த், 25, ஒண்டிப்புதுாரை சேர்ந்த சந்தானராஜ், 22, பீளமேடு புதுாரை சேர்ந்த நித்தீஷ்குமார் 24, உடையாம்பாளையத்தை சேர்ந்த பிரதீப், 24 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி