உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணியில் இருந்து 5.97 கோடி லிட்டர் தண்ணீர் எடுப்பு

சிறுவாணியில் இருந்து 5.97 கோடி லிட்டர் தண்ணீர் எடுப்பு

கோவை; கோவை மாவட்டத்தில் சில நாட்களாக ஆங்காங்கே மழைப்பொழிவு காணப்படுகிறது. அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் மட்டுமே பெய்கிறது; கன மழையாக கொட்டி விடுகிறது.நேற்று காலை, 7:30 மணி வரையிலான, 24 மணி நேரத்துக்கு பதிவான மழை அளவு:கோவை தெற்கு - 4.80 மி.மீ., பீளமேடு விமான நிலையம் - 7.50, வேளாண் பல்கலை - 11.80, மேட்டுப்பாளையம் - 45, அன்னுார் - 12.40, சூலுார் - 17.40, சின்னக்கல்லார் - 27, வால்பாறை பி.ஏ.பி., - 17, வால்பாறை தாலுகா - 15, சோலையாறு - 42 மி.மீ., மழை பதிவானது.பில்லுார் அணை பகுதியில், 3 மி.மீ., பதிவானது; சிறுவாணி பகுதியில் மழையில்லை; அடிவாரத்தில் ஒரே ஒரு மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது. சிறுவாணியில் நேற்றைய தினம், 19.48 அடிக்கு நீர் இருப்பு இருந்தது; 5.97 கோடி லிட்டர் தண்ணீர், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு, மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !