மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
01-Jun-2025
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, ரயிலில் கடத்தி வரப்பட்ட, ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மேற்கு போலீசார், வாலிபரை கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகே, ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் மேற்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த சந்தேகப்படும்படியான நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், தேனி மாவட்டம், போடியை சேர்ந்த திவாகர்,30, என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
01-Jun-2025