மேலும் செய்திகள்
காலாவதியான பஸ்கள் மலைப்பகுதியில் அச்சம்
10-Apr-2025
வால்பாறை : வால்பாறை அரசு போக்குவரத்து கழகத்துக்கு, ஏழு புதிய பஸ்கள் வந்துள்ளன.வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், கோவை, பொள்ளாச்சி, பழநி, மன்னார்க்காடு, சேலம், திருப்பூர் மற்றும் எஸ்டேட் உள்ளிட்ட வழித்தடங்களில், 42 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதில், 10க்கும் மேற்பட்ட பஸ்கள் பழைய 'டப்பா' பஸ்களாக இயக்கப்படுவதாக, 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், வால்பாறை அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஏழு புதிய பஸ்கள் வந்துள்ளன.அரசு போக்குவரத்துக்கழக டெப்போவில் நடந்த புதிய பஸ்கள் துவக்க விழாவில், தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் சதீஸ் கூறுகையில், ''வால்பாறையில் இயக்கப்படும் புதிய பஸ்கள் அனைத்தும், எஸ்டேட் பகுதியிலிருந்து வால்பாறை வழியாக பொள்ளாச்சிக்கு இயக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மட்டும், மதுரை, திருச்சி போன்ற வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்களாக இயக்கப்படும். பழைய பஸ்கள் அனைத்தும் திருப்பி அனுப்பபட்டுள்ளது,'' என்றார்.
10-Apr-2025