மேலும் செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு; 1,416 பேர் பங்கேற்பு
16-Jun-2025
கோவை : டி.என்.பி.எஸ்.சி., குரூப், 4 தேர்வை, 75 சதவீதம் பேர் அதாவது, 30 ஆயிரத்து, 830 பேர் எழுதினர்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள, 3,935 பணி இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நேற்று தேர்வு நடந்தது.காலியாக உள்ள இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளை நிரப்ப, நடந்த தேர்வை எழுத, மாநிலம் முழுவதும், 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.கோவை மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில், 175 குழுவினர் ஏற்படுத்தப்பட்டிருந்தனர்.தேர்வர்கள் காலை 8:30 மணி முதல், தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்னர். தேர்வு காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 12:30 மணி வரை நடந்தது. நேற்றைய தேர்வில், 30 ஆயிரத்து, 830 பேர் எழுதினர். மொத்தம், 12 ஆயிரத்து, 314 ஆப்சென்ட் ஆகினர். மாற்றுத்திறனாளிக்கு உதவிய போலீசார்!
இத்தேர்வை எழுத பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி, சிங்காநல்லுாரை சேர்ந்த கார்த்திகேயன், 24 என்பவரும் விண்ணப்பித்திருந்தார். நேற்று தேர்வு எழுத, கோவை துாய மைக்கேல் பள்ளி மையத்துக்கு அவர் வந்தார். ஆனால், அவருக்கு வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. தவறான தேர்வு மையத்துக்கு வந்ததால், செய்வதறியாது திகைத்து நின்றார். இதை பார்த்த போக்குவரத்து பிரிவு போலீசார் முருகேசன் மற்றும் கணேசன், உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ரபீக், ஆகியோர் மாணவனை பைக்கில் அழைத்து சென்று, அவரது தேர்வு மையத்தில் விட்டனர்.
16-Jun-2025