உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 76வது குடியரசு தின விழா; பலத்த போலீஸ் பாதுகாப்பு

76வது குடியரசு தின விழா; பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை; குடியரசு தினத்தை முன்னிட்டு,கோவையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாட்டின் 76வது குடியரசு தின விழா, நாளை கொண்டாடப்பட உள்ளது. கோவை வ.உ.சி., மைதானத்தில் நடைபெறும் விழாவில், கலெக்டர் கிராந்தி குமார் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.குடியரசு தினத்தையொட்டி, கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் 1,500 போலீசார், புறநகர் பகுதிகளில் எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில், 2000 போலீசார் என 3000க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.போலீசார் சோதனை சாவடிகள், ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை