உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில கபடி இறுதி போட்டியில் 7ஜி ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி

மாநில கபடி இறுதி போட்டியில் 7ஜி ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி

கோவை; சேலம், செந்தாரப்பட்டியில் மாநில அளவிலான கபடி போட்டி இரு நாட்கள் நடந்தது. இதில், 50 அணிகள் கலந்து கொண்டன. பல சுற்றுகளை அடுத்து நடந்த முதல் கால் இறுதி போட்டியில், கற்பகம் பல்கலை அணியும், சேலம் செந்தாரப்பட்டி ஸ்போர்ட்ஸ்கிளப் அணியும் மோதின. கற்பகம் அணி 25-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அரை இறுதி போட்டியில் தம்மம்பட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை எதிர்கொண்ட கற்பகம் பல்கலை அணி, 30-10 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இறுதி போட்டியில் கற்பகம் பல்கலை அணி, செவன் ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை எதிர்கொண்டது. இதில், 28-22 என்றபுள்ளி கணக்கில் செவன் ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணியினரை கற்பகம் கல்வி குழுமங்களின் தாளாளர் வசந்தகுமார், உடற்கல்வி இயக்குனர் சுதாகர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ