உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரக்கிளை முறிந்து விழுந்து 9 மாத குழந்தை இறப்பு

மரக்கிளை முறிந்து விழுந்து 9 மாத குழந்தை இறப்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, மரக்கிளை முறிந்து விழுந்து ஒன்பது மாத குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கோவிலுார் அருகே செல்லக்குட்டியூரை சேர்ந்த ஆறுமுகம் - தேவயானி தம்பதி, குறி சொல்வதற்காக ஊர், ஊராக சென்று, கிடைக்கும் வருவாயில் வாழ்கின்றனர். பொள்ளாச்சி, பக்கோதிபாளையத்தில் ஆலமரத்தின் கிளையில் தொட்டில் கட்டி, அவர்களது ஒன்பது மாத குழந்தையை துாங்க வைத்துள்ளனர். எதிர்பாராதவிதமாக மரக்கிளை உடைந்து குழந்தை மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்தது. இது குறித்து கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் குடும்பத்தோடு ஆறு மாதம் வீட்டிலும், ஆறு மாதம் வெளியூர்களுக்கும் செல்வது வழக்கம். இவர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின், பெண் குழந்தை பிறந்துள்ளது. பக்கோதிபாளையத்தில் குடும்பத்துடன் வந்து தங்கி கிராமங்களில் குறி செல்ல சென்று வருகின்றனர். ஆலமரத்தின் கிளை உடைந்து விழுந்து, குழந்தை இறந்தது குறித்து விசாரிக்கப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ