உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆ - குறுமைய ஹாக்கி போட்டியில் முதலிடம் பெற்ற மாநகராட்சி பள்ளி

ஆ - குறுமைய ஹாக்கி போட்டியில் முதலிடம் பெற்ற மாநகராட்சி பள்ளி

கோவை; ஆ-குறுமைய, 14 வயதுக் குட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில், சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி, முதலிடம் பெற்றது. கோவை மாவட்ட கல்வித்துறை சார்பில், ஆ-குறுமைய விளையாட்டு போட்டிகள், ஸ்டேன்ஸ் பள்ளி, சி.எஸ்.ஐ., மெட்ரிக் பள்ளிகளில் நடக்கின்றன. ஸ்டேன்ஸ் பள்ளியில் நடந்த டேபிள் டென்னிஸ், ஹாக்கி போட்டிகளை, சி.எஸ்.ஐ., பள்ளி முதல்வர் குளோரி லதா துவக்கிவைத்தார். டேபிள் டென்னிஸ், 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில்(தனிநபர்), அவனீஸ் முதலிடத்தையும், பூவிதன் இரண்டாம் இடத்தையும், இரட்டையர் பிரிவில் அவனீஸ், நிகித் ரமேஷ்குமார் ஜோடி முதலிடத்தையும், பிரதீப், மகேஷ் வைபவ் ஜோடி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. 17 வயதுக்குட்பட்டோர்(தனிநபர்) பிரிவில் அபினந்த் முதலிடத்தையும், விஷ்வேஸ் இரண்டாம் இடத்தையும், இரட்டையர் பிரிவில் அபினந்த், சரத் ஜோடி முதலிடத்தையும், கவின், மிதுன் ஜோடி இரண்டாம் இடத்தையும் தட்டிச்சென்றன. ஹாக்கி போட்டியில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி முதலிடத்தையும், இளங்கோ மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தையும், 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், சி.எஸ்.ஐ., பெண்கள் பள்ளி முதலிடத்தையும், சி.எம்.எஸ்., பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. அதேபோல், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், சி.எஸ்.ஐ., பெண்கள் பள்ளி முதலிடத்தையும், நிர்மலா பள்ளி இரண்டாம் இடத்தையும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சி.எஸ்.ஐ., பெண்கள் பள்ளி முதலிடத்தையும், சி.எம்.எஸ்., பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை