உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நந்தவனத்தில் முன்னோர்களுக்கு திதி

நந்தவனத்தில் முன்னோர்களுக்கு திதி

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனத்தில், தை அமாவாசை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.மேட்டுப்பாளையம் கோவிந்தம்பிள்ளை மயானத்தில், நகராட்சிக்கு உட்பட்ட, அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனம் உள்ளது. இங்கு இறந்தவர்களுக்கு, கர்ம காரியம், திதி ஆகியவை செய்யப்படுகிறது.தை அமாவாசை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நந்தவனம் திறக்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். நந்தவனத்தில் வழக்கமாக,12 புரோகிதர்கள் மட்டுமே இருப்பர். தை அமாவாசையை முன்னிட்டு, நந்தவன நிர்வாகத்தினர், கூடுதலாக, 18 புரோகிதர்களை ஏற்பாடு செய்து இருந்தனர். அதனால் பொது மக்கள், திதி கொடுக்க நீண்ட நேரம் காத்திருக்காத நிலை ஏற்பட்டது.மேலும் திதி கொடுக்க சாப்பிடாமல் வரும் மக்களுக்கு, நந்தவன நிர்வாகத்தினர் காலையில் இருந்து தொடர்ந்து அன்னதானம், தேநீர், தண்ணீர் ஆகியவை இலவசமாக வழங்கினர். திதி கொடுக்க நிர்ணய கட்டணம் ஏதுமில்லை.விரும்பிய தொகையை, மக்கள், புரோகிதர்களுக்கு வழங்கினர். தை அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று, முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.இதற்கான ஏற்பாடுகளை, நந்தவன நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை