உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காந்திபுரத்திலிருந்து உக்கடத்துக்கு இப்படியும் ஒரு பகல் கொள்ளை

காந்திபுரத்திலிருந்து உக்கடத்துக்கு இப்படியும் ஒரு பகல் கொள்ளை

கோவை; உக்கடத்திலிருந்து காந்திபுரம் வரை செல்வதற்கும், காந்திபுரத்திலிருந்து உக்கடம் வரை செல்வதற்கும் தனியார் டவுன் பஸ்களில் இரட்டிப்புத்தொகையும் சில பஸ்களில் மும்மடங்கு தொகையும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.கோவை உக்கடத்திலிருந்து காந்திபுரம் வரை டவுன்பஸ்களில் செல்வதற்கு கட்டணம், 6 ரூபாய் மட்டுமே. இது அரசு சொகுசு அல்லது டீலக்ஸ் பஸ்களில் சென்றால் குறைந்த பட்சம், 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை மையமாக வைத்து பஸ் பயணிகளை குழப்பும் வகையில் பெரும்பாலான தனியார் பஸ்களில் காந்திபுரத்திலிருந்து உக்கடத்திற்கு, சொகுசு மற்றும் டீலக்ஸ் பஸ்களில் வசூலிக்கப்படும், 15 ரூபாய் கட்டணத்தையே வசூலிக்கின்றனர். சில பஸ்களில் இரட்டிப்பு கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்கின்றனர். இது பெரும்பாலான வெளியூர் பயணிகளுக்கு தெரிவதில்லை. கண்டக்டர் கேட்கும் கட்டணத்தை கொடுத்து விடுகின்றனர். உள்ளூர் பயணிகளிடம் வசூலிக்கும் போது பிரச்னை ஏற்பட்டு சப்தமிடுகின்றனர். இது குறித்து கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். கலெக்டர் ஆர்.டி.ஓ.,க்களுக்கு ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். அதற்கு பதிலளித்த விவசாயிகள் நாங்கள் புகார் தெரிவிக்கும் போதெல்லாம் இப்படியே தான் பதில் சொல்கிறீர்கள் ஆனால் மோட்டார் வாகன ஆய்வாளர்களோ, வட்டார போக்குவரத்து அலுவலர்களோ ஆய்வு செய்து பெயரளவுக்கு அபராதம் மட்டுமே விதிக்கின்றனர். தனியார் பஸ்களை சிறைபிடித்து பெரும் தொகையை அபராதம் விதித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர். ஆனாலும் இப்பிரச்னை இன்றும் தொடர்ந்து வருகிறது. அதிக கட்டணம் கொடுத்து பயணிகள் தனியார் பஸ்களில் பயணித்து வருகின்றனர்.அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களை சிறை பிடித்து அபராதம் விதித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

koderumanogaran
ஆக 18, 2025 12:15

அரசு நிர்வாகம் முடக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் வாய்மொழி உத்தரவு என்கிறனர் அரசு அலுவலர்கள். திராவிடமாடல் என்பதற்கு துக்ளக் மாடல் என்று பொருள்


Murugesan T
ஆக 17, 2025 08:02

நான் ஒரு முறை ரயில் நிலையத்திலிருந்து காந்திபுரம் பேருந்தில் ஏறி பயணச்சீட்டு எடுத்தேன் ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு பதிலாக 15 ரூபாய்க்கு கேட்டு கொடுத்தார்கள் நான் ஐந்து ரூபாய் தான் என்று கேட்டேன் அதற்கு அவர்கள் இரவு நேர பேருந்து 15 ரூபாய் தான் என்று கூறினார்கள் நான் அதற்கு அரசு பேருந்து தான் இரவு நேர பேருந்து தனியார் பேருந்தில் இரவு நேரம் பேருந்து கிடையாது என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன் அவர்கள் பத்து ரூபாய் திருப்பிக் கொடுத்துவிட்டு இறங்கும்போது டிக்கெட்டையும் திரும்பி வாங்கிக் கொண்டார்கள் கேள்வி கேட்பவருக்கு டிக்கெட் ஐந்து ரூபாய் கொடுக்கிறார்கள் வெளியூரில் இருந்து வரும் பயணிகளிடம் அதிக தொகை வசூலிக்கிறார்கள் இது அரசுக்கு தெரியாமல் இருக்காது தெரிந்தே செய்கிறார்கள் இது ரொம்ப காலமாக உள்ளது யார் மாற்றுவது நம்மிடம் அதிகாரம் இல்லையே மக்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்.


mohankumar govindasamy
ஆக 16, 2025 18:42

அதுதான் அன்பளிப்பு வாங்கி விடுகிறார்களே. பிறகு எப்படி அபராதம் விதிக்க முடியும். பொது ஜனம் ஆயுசு பூரா இப்படியே புலம்பி கொண்டே இருங்கள். யாருமே கண்டுக்க மாட்டாங்க.


V Gopu
ஆக 16, 2025 17:55

நானும் இதேபோல் மூன்று மாதங்களுக்கு முன் தனியார் பேருந்தில் பிரச்சினையை எதிர் கொண்டேன். காந்திபுரம் டூ ரயில் நிலையம் வரைதான் பயணம் செய்த போதும் அதே அநியாய கட்டணம் செலுத்தினேன். பயணச்சீட்டில் பேருந்து நிறுவனப்பெயரோ, பயணச்சீட்டு எண்ணோ, விதிமுறைகளோ அச்சிடப் படவில்லை. தொகை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். துண்டுச்சீட்டுதான். கணக்கிலேயே வராது. மேலும் உக்கடம் வரை ஒரே கட்டணம் தான். என விளக்கம் வேறு. வாக்குவாதம் செய்தும் பலனில்லை. அதற்குள் ரயில் நிலைய நிறுத்தம் வந்ததால் ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் கடந்து வந்து விடவேண்டியதாயிற்று.


V GOPALAN
ஆக 16, 2025 12:39

Most of the privates buses are DMK Binami only. But this paper will accept our comments and act as if they are not aware


Siva
ஆக 16, 2025 10:59

நானும் ஒரு ஆறு மாதங்களுக்கு முன் இந்த பிரச்சனையை அனுபவித்தேன்.. இது மட்டும் அல்லாது தனியார் பேருந்து மட்டும் இல்லை மேட்டுப்பாளையத்தில் இருந்து வெளியூர் செல்லும் புறநகர் பேருந்திலும் இதே நிலைதான்.‌ கடந்த மாதம் தேரம்பாளைம் ஸ்டேஜ் ல் இருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக வசூலித்தார்கள்..பல முறை அனுபவித்து உள்ளேன்.. வீண் வாதத்தை தவிர்க கடந்து செல்ல வேண்டி உள்ளது.. இந்த விஷயத்தில் பாதிப்பவர்கள் நம்மை போன்ற அப்பாவிகள் தான்.. இந்த கொள்ளையில் சில தனியார் மற்றும் சில அரசுபோக்குவரத்து நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது கலைக்கும் வருத்தத்திற்கும் உரியது.. மனிதம் எங்கே.. பொது போக்குவரத்தை நாடுவோர்.. வசதி படைத்தவர்கள் அல்ல.. நடுத்தர வர்கத்தினர்.. என்பதை பணியில் இருப்பவர்கள் முதலில் உணரவேண்டும்..அரசு உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை