ஏ டிவிஷன் கால்பந்து 13 அணிகள் பங்கேற்பு
கோவை; கோவை மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து 'ஏ' டிவிஷன் லீக் போட்டி அண்ணா பல்கலை மண்டல மைய மைதானத்தில் கடந்த, 15ம் தேதி துவங்கியது; டிச., 5ம் தேதி வரை நடக்கிறது. இதில், 13 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.முதல் போட்டியானது, அத்யாயனா புட்பால் கிளப் மற்றும் பேரூர் புட்பால் கிளப் இடையே நடந்தது. இதில், 4-2 என்ற கோல் கணக்கில் அத்யாயனா அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, வீனஸ் புட்பால் கிளப், ஹீரோஸ் புட்பால் கிளப் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. நேற்று, அத்யாயனா அணி, 5-2 என்ற கோல் கணக்கில் ஹீரோஸ் அணியை வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன.