உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துஸ்தான் கல்லுாரியில் மாபெரும் தமிழ் கனவு

இந்துஸ்தான் கல்லுாரியில் மாபெரும் தமிழ் கனவு

கோவை; ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'மாபெரும் தமிழ் கனவு' எனும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமை வகித்தார். 'தனித்துவம் கொண்ட தமிழ்நாடு' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் செந்தில்வேல் சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு பயனளிக்கும் தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன், உயர்வுக்குப்படி ஆகிய திட்டங்கள் மற்றும் ஆதார் முகாம், இ-சேவை, உளவியல் ஆலோசனை, வங்கி சேவைகள், மருத்துவ பரிசோதனை போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டன. இந்துஸ்தான் உட்பட ஆறு கல்லுாரிகளைச் சேர்ந்த, 1,000 மாணவர்கள் பங்கேற்றனர். சிறந்த பங்களிப்பை வழங்கிய மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரியின் அறங்காவலர் சரஸ்வதி, இணை செயலாளர் பிரியா, முதல்வர் ஜெயா, கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் செண்பகலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி