உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அ-குறுமைய பீச் வாலிபால் வீரர், வீராங்கனைகள் சபாஷ்

அ-குறுமைய பீச் வாலிபால் வீரர், வீராங்கனைகள் சபாஷ்

கோவை; மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் அ-குறுமைய பீச் வாலிபால் போட்டி, கோவை தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவில், 10க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் கலந்து கொண்டன. 14, 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில், சபர்பன் மேல்நிலைப்பள்ளி அணி, ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது. 14, 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் சபர்பன் பள்ளி அணி, பிரசன்டேஷன் பள்ளி அணியை வென்று, முதலிடம் பிடித்தது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளி அணி, சபர்பன் பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ