உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் அமைக்க வேண்டும்

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் அமைக்க வேண்டும்

அன்னுார் : பள்ளி தரம் உயர்த்தப்பட்டு, 15 ஆண்டுகள் ஆகியும், ஆய்வகம் அமைக்கப்படவில்லை, என புகார் தெரிவித்துள்ளனர். அன்னுார் அருகே ஆனையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பல கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இங்கு ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நடராஜன் கூறுகையில், 'இப்பள்ளி 2009ம் ஆண்டு உயர்நிலையில் இருந்து, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும், மேல்நிலைப் பள்ளிக்கான ஆய்வகம் அமைக்கப்படவில்லை. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஆய்வகத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர். வகுப்பறைகள் குறைவாக உள்ளன.வராண்டாவில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டி உள்ளது. கூடுதலாக மூன்று வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும். ஆய்வகம் அமைக்க வேண்டும். கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது,' என்றார்.மேட்டுப்பாளையம், அக். 12--காரமடை அருகே வெண்மணி நகர் பகுதியில் இஸ்லாமிய பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு காரமடை குட்டையூர் பகுதியைச் சேர்ந்த முகமது நிவாஸ், 27, பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி இரவு, பாடசாலையை மூடி விட்டு சென்றார். மறுநாள் காலை பாடசாலைக்கு சென்று பார்த்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, லேப்டாப் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து காரமடை போலீசார் விசாரித்து வந்தனர். இது தொடர்பாக ஊட்டியை சேர்ந்த மணிகண்டன், 29, மத்தம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக், 47, ஆகிய இருவரை கைது செய்து லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ