உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காந்திபுரத்தில் 6.98 ஏக்கரில் உருவாகிறது நுாலகம்; கோவையின் புது அடையாளமாக விளங்கும்

காந்திபுரத்தில் 6.98 ஏக்கரில் உருவாகிறது நுாலகம்; கோவையின் புது அடையாளமாக விளங்கும்

கோவை; கோவை, காந்திபுரத்தில், செம்மொழி பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில், 6 ஏக்கர், 98 சென்ட் நிலத்தில், எட்டு தளங்களுடன் நுாலகம் அமைப்பதற்கான கட்டுமான பணியை, பொதுப்பணித்துறை துவக்கியுள்ளது.கோவை, காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்க ஒதுக்கிய, மத்திய சிறைக்குச் சொந்தமான, 6 ஏக்கர், 98 சென்ட் நிலத்தில், 1.98 லட்சம் சதுரடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், நவ., 6ல் அடிக்கல் நட்டார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.நுாலகத்தின் தரைத்தளத்தில் ஆடிட்டோரியம் மற்றும் அறிவியல் மையம், முதல் தளத்தில் அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நுாலகம் மற்றும் போட்டி தேர்வுகளுக்கான நுாலகம், மூன்றாம் தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நுாலகம் மற்றும் தலைமை நுாலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ் புத்தகப்பிரிவு மற்றும் சொந்த புத்தகம் படிக்கும் பிரிவு, ஐந்தாம் தளத்தில் தமிழ் புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஆறாம் தளத்தில் பருவ இதழ்கள் மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம், ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் டிஜிட்டல் நுாலகம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.நான்கு இடங்களில் 'லிப்ட்' வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பேனல் அறை, குடிநீர் மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.இதனால், கோவையின் புதிய அடையாளமாக, இந்நுாலகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

G VEERAMANIKANDAN
டிச 26, 2024 22:31

விரைவாக கட்டுமான பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட மாடல் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள்...?❤️


ManiK
டிச 26, 2024 12:41

திக, திமுகவின் தேவையில்லாத சித்தாந்த பரப்பிடம் தான் இந்த நாலகங்கள். மக்கள் வரிப்பணம் இந்த மாதிரி போர்வையில் ஒரு கட்சியால் ஹைஜாக் பண்ணப்படுவது கண்டனத்துக்குறியது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை