உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுலா பயணியரை விரட்டிய ஒற்றை யானை

சுற்றுலா பயணியரை விரட்டிய ஒற்றை யானை

வால்பாறை; வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் வாகனத்தில் வந்த சுற்றுலா பயணியரை யானைகள் விரட்டியதால், பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், இருமாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் இங்கு சென்று வருகின்றனர்.வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி அருகே யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பகல் நேரத்தில் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் ரோட்டை கடக்கின்றன.இந்நிலையில், வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண இரண்டு வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணியரை எதிரே வந்த ஒற்றை யானை ஆவேசமாக விரட்டியது. இந்த சம்பவத்தில் வாகனங்களை பின்நோக்கி நகர்த்தினர். நீண்ட நேரத்திற்கு பின் யானை வனப்பகுதிக்குள் சென்றதும் வாகனங்கள் எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தில் சுற்றுலா பயணியர் அதிர்ஷடவசமாக தப்பினர்.கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். பிற வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானைகள் ரோட்டை கடந்து செல்வதை கண்டால், அவற்றிற்கு வழிவிட்டு வாகனங்களை ஓரமாக நிறுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை