உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுவர் இடிந்து விழுந்து ஒரு வயது குழந்தை பலி

சுவர் இடிந்து விழுந்து ஒரு வயது குழந்தை பலி

கோவை : அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பெகுகுல் ஷேக், 20. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கோவை வந்தார். கோவையில் ஒண்டிப்புதுார் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தங்கி, அவரது மாட்டுப் பண்ணையில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த, 4ம் தேதி இவரது ஒரு வயது குழந்தை பாத்திமாவும், பண்ணை உரிமையாளர் ராஜேஷ்குமாரின், 2 வயது குழந்தையும் வீட்டின் அருகே உள்ள, பழமையான மதில் சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக, அந்த சுவர் இடிந்து குழந்தைகள் மீது விழுந்தது. அங்கிருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயம் அடைந்திருந்த பாத்திமாவுக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை