உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் தொடர்பான புகார் தெரிவிக்க போன் எண் அறிவிப்பு வைக்கணும்

மின் தொடர்பான புகார் தெரிவிக்க போன் எண் அறிவிப்பு வைக்கணும்

பொள்ளாச்சி; டிரான்ஸ்பார்மர் ஒட்டிய பகுதிகளில், மின் சார்ந்த தகவல்களை தெரிவிக்க மொபைல்போன் எண்ணை அறிவிக்க வேண்டும். சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம், 2021 ஜூனில் துவக்கப்பட்டது. அதன்படி, 94987 94987 என்ற மொபைல்போன் எண்ணில், மாநிலம் முழுவதும் வசிக்கும் மக்கள், மின் தடை, மின்னழுத்தம், மீட்டர் பழுது உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும், 24 மணி நேரம் தெரிவிக்கின்றனர். இந்த மொபைல்போன் எண், பொள்ளாச்சி கோட்ட மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் மின் சார்ந்த புகார் இருந்தால், மின்நுகர்வோர், இந்த மொபைல்போன் எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூறுகையில், 'மின் சார்ந்த புகார் தெரிவிக்கும் மொபைல்போன் எண் குறித்த விபரத்தை பொதுமக்கள் முழுமையாக அறிந்து கொள்ளாமல் உள்ளனர். எனவே, அனைத்து டிரான்ஸ்பார்மர் ஒட்டிய பகுதிகளில் இந்த மொபைல்போன் எண்ணை அறிவிப்பாக இடம்பெற செய்ய வேண்டும். அப்போது, எந்தவொரு புகாராக இருந்தாலும், எவர் வேண்டுமானாலும் உடனடியாக தகவல் அளிக்கலாம்,' என, தெரிவித்துள்ளனர். இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மையத்தில் பெறப்படும் புகார், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோருக்கும் புகார் எண், எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படுகிறது. இதனால், புகார் மீது பொறியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கின்றனர். பொதுமக்கள் அறிந்து கொள்ளும் படி, மொபைல்போன் எண் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ