உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தோஷம் இருப்பதாக கூறி மோதிரம்; அபகரித்த இருவர் கைது

தோஷம் இருப்பதாக கூறி மோதிரம்; அபகரித்த இருவர் கைது

மேட்டுப்பாளையம் : காரமடையில், பெண்ணிடம் தோஷம் இருப்பதாக கூறி மோதிரத்தை அபகரித்து சென்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.காரமடை அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் உமாவதி,52. இவர் வீட்டில் நேற்று முன்தினம் காலை தனியாக இருந்த போது, அங்கு ஜோதிடம் பார்ப்பது போல் இருவர் வந்தனர். அவர்கள் அரிசி கேட்டனர். உமாவதி வீட்டினுள் சென்று அவர்களுக்கு வழங்குவதற்காக அரிசியை எடுத்து வந்தபோது, உமாவதியிடம் அவர்கள் இருவரும், தங்களுக்கு நேரம் சரியில்லை, அதனால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம், உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் ஆகாமல் போகலாம் என கூறியுள்ளனர். மேலும், இதனை நிவர்த்தி செய்ய திருநீறில் தங்க மோதிரத்தை வைத்து பூஜை செய்தால், சரியாகிவிடும் என கூறியுள்ளனர்.இதை நம்பிய உமாவதி தனது விரலில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை கழற்றி, பூஜை செய்து தருமாறு அவர்களிடம் கொடுத்தார். அப்போது, மர்ம நபர்கள் இருவரும் உமாவதியிடம் ஒரு வெள்ளை துணி வேண்டும் என கேட்டுள்ளனர். இதையடுத்து, உமாவதி வெள்ளை துணியை எடுக்க வீட்டின் அறைக்குள் சென்ற போது, மர்ம நபர்கள் இருவரும் தங்க மோதிரத்தை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். புகாரின் பேரில் காரமடை போலீசார், பொள்ளாச்சியை சேர்ந்த செல்வராஜ், 50, விஜய், 28, ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து தங்க மோதிரத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை