உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வெள்ளானைப்பட்டியில் இருளில் மிதக்கும் சாலை

 வெள்ளானைப்பட்டியில் இருளில் மிதக்கும் சாலை

அன்னூர்: கள்ளிப்பாளையத்தில் இருந்து வெள்ளானைப்பட்டி செல்லும் 2 கி. மீ., தூர பாதையில் தெரு விளக்குகள் இல்லை. இரவு நேரத்தில் இப்பகுதி கும்மிருட்டாக உள்ளது. வாகராயம்பாளையம் மற்றும் பச்சாபாளையத்திலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விட்டு வீடு திரும்புவோர், அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டி உள்ளது. விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகம் உள்ளது. 'கள்ளிப்பாளையம் மற்றும் வெள்ளானைப்பட்டி ஊராட்சி நிர்வாகங்கள், உடனடியாக இந்த வழித்தடத்தில் தெருவிளக்குகள் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை