உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதரை அகற்ற வந்தாச்சு ரோபோ! இதுவாவது தொடர்ந்து பயன்படுத்தப்படுமா?

புதரை அகற்ற வந்தாச்சு ரோபோ! இதுவாவது தொடர்ந்து பயன்படுத்தப்படுமா?

கோவை; கோவை மாநகராட்சி சார்பில், வார்டுதோறும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போதிய பராமரிப்பின்றி, புதர்மண்டி காணப்படுகின்றன. அவற்றை பராமரிக்கும் பொறுப்புக்கு டெண்டர் விடப்படுகிறது. புதரை விரைந்து அகற்றுவதற்கு, 'ரோபோ' இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.முத்தண்ணன் குளக்கரையில் இருந்த புதர் களை, அவ்வியந்திரம் அகற்றுவதை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். ஒரு மணி நேரத்தில், ஒரு ஏக்கர் பரப்பில் வளர்ந்துள்ள புதரை அகற்றுவது உறுதி செய்யப்பட்டது. மண்டலத்துக்கு ஒன்று வீதம், ஐந்து ரோபோ இயந்திரங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. இவை முறையாக பயன்படுத்தப்படுமா, சரியாக பராமரிக்கப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.ஏனெனில், பாதாள சாக்கடை அடைப்பு நீக்க, தனியார் நிறுவனம் சார்பில் சமுதாய பொறுப்பு நிதியில், 'ரோபோ' இயந்திரம் வாங்கித் தரப்பட்டது.துவக்கத்தில், ஸ்டேட் பாங்க் ரோடு, காந்திபார்க் தடாகம் ரோடு பகுதிகளில் அடைப்பு நீக்க பயன்படுத்தப்பட்டது. அதன் பின், பழுதடைந்து விட்டதாக ஓரங்கட்டப்பட்டது. அதன்பின், பழுது நீக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இப்போது அதன் திறன் சரியில்லை என கூறி, ஓரங்கட்டப்பட்டு விட்டது.இதே போல், சில ஆண்டுகளுக்கு முன், ரோட்டில் பரவிக் கிடக்கும் மண்ணை அள்ளுவதற்கு நவீன லாரி வாங்கப்பட்டது. டீசல் செலவு அதிகமாவதாக கூறி, ஓரங்கட்டப்பட்டது. ஆண்டுக்கணக்கில் ஓரங்கட்டப்பட்டிருந்த அந்த லாரியை, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டு, பழுது சரிபார்க்கப்பட்டது. ஆனால், டீசல் செலவு கட்டுப்படியாகாது என கூறி, பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.இப்போது புதர் வெட்டுவதற்கு, 'ரோபோ' இயந்திரம் வாங்கப்பட்டு இருக்கிறது; ஊழியர்களுக்கு பயிற்சி அளித்திருப்பதாக கூறுகின்றனர். இவ்வியந்திரத்தையாவது, நன்கு பராமரித்து தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

அளிக்கப்பட்டுள்ளது'

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''ஒழுங்காக பயன்படுத்த, ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. தினமும் பயன்படுத்துவது கண்காணிக்கப்படும். பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும், 'ரோபா' இயந்திரம் பயன்படுத்துவதற்கு இலகுவாக இல்லை; அதனால், பயன்படுத்தாமல் விட்டு விட்டனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajasekar Jayaraman
ஜன 15, 2025 11:13

கமிஷன் வந்தாச்சா ஓரங்கட்டு.


Dharmavaan
ஜன 15, 2025 09:15

வாங்குவதற்கு முன் சோதித்து வாங்கப்பட்டது தானே எப்படி சரியில்லாமல் போகும் எல்லாம் கொள்ளை யில் ஒரு நாடகம்


நிக்கோல்தாம்சன்
ஜன 15, 2025 06:13

இந்த ரோபோ கோவையிலியேயே தயாரிக்கப்பட்டது ஆகையால் அந்த கம்பெனியையே வந்து சரி செய்ய சொல்லலாம்


Dharmavaan
ஜன 15, 2025 09:12

மெஷின் வாங்க கமிஷன் வாங்கி ஆயிற்று .இனி அடித்த மெஷின் இதை காயலான் கடைக்கு ஏலம் .அதில் ஒரு கமிஷன் திரும்ப தனியார் காண்ட்ராக்ட் இப்படி பல வழிகளில் கொள்ளை


முக்கிய வீடியோ