ஒற்றையானையால் படுதொல்லை; புகாரளித்தும் நடவடிக்கையில்லை
கோவை; கோவையில் சுற்றித்திரியும் ஒற்றையானையால், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில், அதை பிடித்து வேறு வனத்தில் விடும் முயற்சி களை வனத்துறைமேற்கொள்ள வேண்டும் என்று, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கோவை தடாகத்தில் 2025 ஜன.,23ல், நடராஜ் என்பவர் காட்டுயானை வேட்டையனால் மிதித்து கொல்லப்பட்டார். நேற்று முன் தினம், விராலியூரை சேர்ந்த ரத்தினா என்ற பெண்ணை, அதே யானை மிதித்து கொன்றது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் வனத்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும், யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விட வலியு றுத்தி, விவசாயிகள் மன்றாடி வருகின்றனர். ஆனால் இது குறித்து வனத்துறை, எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது. இது குறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி கூறியதாவது: தலைமை வனப்பாதுகாவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, மனித உயிருக்கும் விளைபயிருக்கும் சேதம் ஏற்படுத்தும் வனவிலங்குகளை இடம் மாற்றம் செய்யலாம். இது குறித்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதை விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாக பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.