உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வானுயர்ந்த கொடிகம்பம்

வானுயர்ந்த கொடிகம்பம்

ஆனைமலையில் காவல் தெய்வமாக வீற்று இருக்கும் மாசாணி அம்மன் கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து கொடிக்கம்பம் கொண்டு வருவது வழக்கமாக உள்ளது.இதற்காக முறைதாரர்கள், மாசாணி அம்மன் கோவில் நற்பணி மன்றம், மற்றும் பக்தர்கள் சர்க்கார்பதி வனப்பகுதிக்கு சென்று உயரமான மூங்கில் மரத்தை கொண்டு வருவர்.அதன்பின், அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்படும்.அங்கு இருந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பத்தை பக்தர்கள் தோலில் சுமந்தபடியேஊர்வலமாக மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு வருவர். மறுநாள் ஆழியாறு ஆற்றுப்படுகையில் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெறும்.கோவிலின் நான்கு புறமும் கயிறு கட்டி கம்பம் நிலை நிறுத்தப்படும். ராஜகோபுரம் முன்பாக நிலை நிறுத்தப்படும் கம்பத்துக்கு, பக்தர்கள் வழிபாடு செய்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ