மேலும் செய்திகள்
வழிப்பறி செய்த இருவர் கைது
12-Sep-2025
கோவை:ஜி.என்.மில்ஸ், உடையாம்பாளையம் மாநகராட்சி பள்ளி அருகில், இருவர் வழிமறித்து, பணம் மற்றும் மொபைல்போனை பறித்தனர். அவர்களுடன் கார்த்திகேயன் போராடியும் சம்பளப்பணம், ரூ.3,000 மற்றும் மொபைல்போனை பறித்து தப்பினர். கார்த்திகேயன் அவர்களை துரத்தினார். அவர்கள் மொபைல்போனை மட்டும் திருப்பிக் கொடுத்து விட்டு சத்தம் போட்டால், கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டினர். அப்பகுதியினர் பலர் கூடியதால், அவர்கள் அங்கிருந்து தப்பினர். துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், பணத்தை பறித்தது, நல்லம்பாளையம் தண்டல் முத்தன் வீதியை சேர்ந்த கார்த்திக், 25, ரத்தினபுரி சண்முகா நகரை சேர்ந்த அருண்குமார், 21 எனத் தெரிந்தது. இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டது .
12-Sep-2025