வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மிகவும் கொடுரமான சம்பவம். ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
அவிநாசி; அவிநாசி அருகே டேங்கர் லாரி பின்புறம் கார் மோதியதில், காரில் வந்த வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு பலியானார்.கோவை, மசக்காளிபாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரன் மகன் அபிமன் சூர்யா, 26; பெங்களூரில் பணிபுரிகிறார்.நேற்று மாலை கோவையில் இருந்து அவிநாசிக்கு காரில் புறப்பட்டார். சேலம் - கொச்சி பைபாஸ் சாலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள தெக்கலுார், வடுகபாளையம் பிரிவு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரியின் பின்புறம் மோதி, உருக்குலைந்தது. காரின் முன்புற இரும்பு தகடுகள் சிதைந்து வெட்டியதில், அபிமன் சூர்யா தலை துண்டிக்கப்பட்டு அதே இடத்தில் பலியானார்.அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
மிகவும் கொடுரமான சம்பவம். ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி