உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் ஆதார் பதிவு; புதுப்பிக்க கோரிக்கை

பள்ளிகளில் ஆதார் பதிவு; புதுப்பிக்க கோரிக்கை

பெ.நா.பாளையம்; பயோமெட்ரிக் எனப்படும் கண் கருவிழி படலம் மற்றும் கைவி ரல் ரேகை புதுப்பிப்பு பணியை பள்ளிகளில் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 5 முதல், 15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை மற்றும் கண் கருவிழி படலம் பதிவு செய்து புதுப்பிக்க வேண்டியது அவசியம். 17 கோடி ஆதார் எண்களுக்கான புதுப்பிக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன. பள்ளி குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்காவிட்டால், பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பலன்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். குறிப்பாக, நீட், ஜே.இ.இ., சி.யு.இ.டி., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பெயர்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, நிலுவையில் உள்ள பயோமெட்ரிக் புதுப்பிக்கும் பணிகளை முடிக்க, பள்ளிகளில் முகாம்கள் நடத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !