உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குமரன் குன்று கோவிலில் ஆடிப்பூர விழா

குமரன் குன்று கோவிலில் ஆடிப்பூர விழா

அன்னுார்; குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று ஆடிப்பூர விழா நடந்தது. பிரசித்தி பெற்ற குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 41வது ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று நடந்தது. நேற்று காலை 108 கலசங்களுக்கு வழிபாடு நடந்தது. இதையடுத்து, வேள்வி பூஜை நடந்தது. மதியம் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால், கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, அலங்கார பூஜை நடந்தது. கல்யாண சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ