உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அப்துல்கலாம் நினைவு நாள் மரக்கன்றுகள் நடும் விழா

அப்துல்கலாம் நினைவு நாள் மரக்கன்றுகள் நடும் விழா

சூலுார்; முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளை ஒட்டி, மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர்கள் சங்கம் மற்றும் கே.பி.ஆர்., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், 10வது நினைவு நாளை ஒட்டி, மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், கல்லுாரி வளாகத்தில் நடந்தது. சங்கத்தின் நிறுவனர் செந்தில்குமார், கல்லுாரி முதல்வர் சரவணன், சங்க நிர்வாகிகள், மாணவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர். தொடர்ந்து நடந்த கருத்தரங்கில், சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விளக்கப்பட்டது. மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல், வினாடி - வினா நடந்தது. பண்பாட்டு கலைஞர் அரவிந்த் தலைமையிலான குழுவினர், சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நாடகம் பார்வையாளர்களை கவர்ந்தது. மாணவர்களுக்கு, விதை பந்துகள் வழங்கப்பட்டன. சங்க செயலாளர் மணிமேகலை, நிர்வாகிகள் நிர்மல் குமார், மெளலியா, பிரசன்னா தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை