மேலும் செய்திகள்
பல்கலை மாணவிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்
27-Dec-2024
கோவை; சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதை கண்டித்து, ஏ.பி.வி.பி.,யினர் கோவை காந்திபுரம் பவர் ஹவுஸ் பகுதியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளான, சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் சார்பில், ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.அதன் ஒரு பகுதியாக, கோவை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏ.பி.வி.பி., தேசிய செயற்குழு உறுப்பினர் விக்னேஷ் தலைமையில், நகர செயலாளர் கவுசிக் முன்னிலையில், 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27-Dec-2024