உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தனுார் அஞ்சலகம் சார்பில் விபத்து காப்பீடு வினியோகம்

போத்தனுார் அஞ்சலகம் சார்பில் விபத்து காப்பீடு வினியோகம்

கோவை : போத்தனுார் துணை அ ஞ்சலகத்தில், அஞ்சலக சேமிப்பு கணக்கு வாயிலாக, யேசுதாஸ், 64, 2024ம் ஆண்டு, பிரதம மந்திரி ஜன் சுரக்சா யோஜனா (PMSBY) திட்டத்தில், ஒரு முறை ரூ.20 செலுத்தினார். அதே ஆண்டு, எதிர்பாராவிதமாக நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். உரிய ஆவணங்களை பரிசீலித்து, ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடுத் தொகை, அவரது மனைவி ஹெலனிடம் வழங்கப்பட்டது. கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் கூறுகையில், ''இத்திட்டத்தில், 18 முதல் 70 வயது வரையுள்ளவர்கள் பயன்பெறலாம். ஒரு சேமிப்பு கணக்கு மட்டும் வைத்திருந்தால் போதும். ஆண்டு தோறும் ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். பொதுமக்கள் நலனை நோக்கமாகக் கொண்டு, அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான சமூக பாதுகாப்பு திட்டம் இது. விவரங்களுக்கு, அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ