உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்து காப்பீடு திட்டம்; தபால் துறை அழைப்பு

விபத்து காப்பீடு திட்டம்; தபால் துறை அழைப்பு

பொள்ளாச்சி; 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் வாயிலாக தபால் அலுவலகங்களில், விபத்து காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்,' என, தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினி பேகம் தெரிவித்தார்.தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு, 500 - 700 ரூபாய் பிரீமியத்தில், 10 லட்சம் - 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தபால் அலுவலகங்கள் வாயிலாக விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில், 18 முதல், 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். காகித பயன்பாடின்றி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி, ஐந்து நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் பாலிசி வழங்கப்படும்.10 லட்சம் அல்லது 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி உள்ளது.விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள், உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை, வெளி நோயாளிகளுக்கு அதிகபட்சம், 30 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிக பட்சம் இரண்டு குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.விபத்தினால் மரணம் அல்லது நிரந்தர முழு ஊனம் அல்லது நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகை ஒரு நாளுக்கு அதிக பட்சம், ஆயிரம் ரூபாய் வீதம், 15 நாட்களுக்கு வழங்கப்படும். விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் ஈமக்கிரியைகள் செய்ய, 5,000 ரூபாய் வரை வழங்கப்படும்.சூப்பர் 'டாப் அப்' மருத்துவ காப்பீடு திட்டத்தின் வாயிலாக, 2,000 ரூபாய் கட்டி, 15 லட்சம் ரூபாய்க்கான கூடுதல் மருத்துவ காப்பீட்டை பெறலாம். இத்தகவலை, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி