உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளியன்று விபத்து 4 மடங்கு அதிகரிப்பு: மது போதையில் அதிக விபத்துக்கள்

தீபாவளியன்று விபத்து 4 மடங்கு அதிகரிப்பு: மது போதையில் அதிக விபத்துக்கள்

கோவை: தீபாவளி தினத்தன்று கோவை மண்டலத்தில், வாகன விபத்து சார்ந்த அழைப்புகள் 831 பதிவாகியுள்ளது. இது வழக்கமான நாட்களுடன் ஒப்பிடுகையில், 4 மடங்கு அதிகம். மாவட்டத்தில், 348 அவசர அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக பதிவாகியுள்ளது. குறிப்பாக, சாலை விபத்துக்கள் (126) மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 1,353 இயக்கப்படுகின்றன. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில், மொத்தமாக 424 ஆம்புலன்ஸ் உள்ளன. தீபாவளியன்று பட்டாசு விபத்துக்களை காட்டிலும், சாலை விபத்துக்கள் சார்ந்த அவசர அழைப்புகள் அதிகம் வந்துள்ளன. கோவை மண்டலத்தை பொறுத்தவரையில், சாலை விபத்துக்கள் தொடர்பாக, வழக்கமாக சுமார் 225 அழைப்புகள் வரும். ஆனால், தீபாவளி தினத்தில் 831 அழைப்புகள் பதிவாகியுள்ளன. மது போதையில் வாகனங்களை இயக்கி, விபத்துக்குள்ளானவர்கள் அதிகம். வன்முறை 221 அழைப்புகள், வாகனம் அல்லாத விபத்துக்கள் 216, சுயநினைவு இழப்பு 337, மூச்சுத்திணறல் 172, தீக்காயம் 71 உட்பட 2,336 அழைப்புகள் பதிவாகியுள்ளது. வழக்கமாக, தினமும் 1,494 அழைப்புகள் சராசரியாக கோவை மண்டலத்தில் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆம்புலன்ஸ் கேட்டு

வந்த அழைப்புகள்'

108 ஆம்புலன்ஸ் மாவட்ட திட்ட அலுவலர் கணேஷ் கூறுகையில், ''தீபாவளி தினத்தன்று வாகன விபத்து அதிகமாக பதிவாகியுள்ளது. ஹாட்ஸ்பாட் பகுதிகளில், 108 ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டதால், உடனுக்குடன் சேவை வழங்க முடிந்தது. மாநில அளவில், வழக்கமாக, 5051 அழைப்புகள் ஒரு நாளில் பதிவாகும்; தீபாவளி நாளன்று 7,463 அழைப்புகள் பதிவாகி இருந்தன. கோவை மண்டலத்தில், 2,336 (வழக்கமாக 1,494) அழைப்பு பதிவாகி இருந்தது. கோவையில், 348 ( வழக்கமாக 231) அழைப்புகள் பதிவாகி இருந்தது, '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ