பி.வி.என்., பள்ளி மாணவர்கள் சாதனை
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி பரத் வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.மாணவி சுகி, 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடமும், கோவை மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.பள்ளியின் தாளாளர் சாந்தி ஆனந்த், பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர் பரத் முருகவேல், பள்ளி முதல்வர் சந்தோஷ்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், பெற்றோர்கள் மாணவியை பாராட்டினர்.