உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காந்தி ஜெயந்திக்கு விடுமுறை இல்லை; 189 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்திக்கு விடுமுறை இல்லை; 189 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை:தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் அறிக்கை: தேசிய பண்டிகை தினங்களான ஜன., 26, மே 1, ஆக. 15, அக். 2 ஆகிய நாட்களிலும் மற்றும் குறைந்தது 5 பண்டிகை நாட்களிலும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தொழிலாளர்கள் பணிபுரிய நேர்ந்தால், உரிய படிவத்தில், தொழிலாளர் ஒப்புதல் பெற்று உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்ப வேண்டும். பணிபுரிபவர்களுக்கு, இரட்டிப்பு ஊதியம் அல்லது விடுமுறை தினத்துக்கு முன்னதாகவோ, பிறகோ ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். காந்தி ஜெயந்தி தினத்தில், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிப்பதை உறுதி செய்ய, கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 218 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், 103 கடைகள், 86 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 189 நிறுவனங்களில், விடுமுறை விடாமல் இருந்ததும், தொழிலாளர் நலத்துறைக்கு உரிய படிவம் சமர்ப்பிக்காததும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிறுவனங்களில் அடுத்த மாதம் ஆய்வு மேற்கொண்டு, உரிய மாற்று விடுப்போ, இரட் டிப்பு ஊதியமோ வழங்கப்பட்டது குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை